தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், 5 மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இது குறித்து தெரிவித்துவிட்டதாகவும் இரண்டு முறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.