தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை மறு பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி செய்தி ஊடகத்தின் கேள்விக்கு பதில் அளித்த அவர், 5 மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இது குறித்து தெரிவித்துவிட்டதாகவும், இருமுறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.