ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்த கொலையில் சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று கூறப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்வோம் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதனால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.