பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மலர்கொடியை அதிமுகவில் இருந்து நீக்கம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளார் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.