BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்வதில் அவர் குற்றவாளிகளிடம் போனில் பேசியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அஞ்சலை தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.