வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக மலப்புரம் சாலியார் ஆற்றில் ஏராளமான சடலங்கள் மிதப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆற்றில் இருந்து சுமார் 16 சடலங்கள் மீட்கப்பட்டன. ஆற்றில் மூன்று வயது குழந்தை ஒன்றும் கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எம்எல்ஏ ஐ.சி.பாலகிருஷ்ணனும் ஆற்றில் சடலங்கள் மிதப்பதை உறுதிப்படுத்தினார்.