ரஷ்யாவின் தாகெஸ்தானின் வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள ஒரு ஜெப ஆலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஒரு மதகுரு கொல்லப்பட்டனர். மேலும் ஆலயத்திற்கு வந்த பொதுமக்களும் உயிரிழந்ததாகவும், பலரும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.