ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளதாக, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பால்வளத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிறுவனத்தில், பால் மற்றும் பால் பொருள்கள் விற்கப்படுகின்றன. கோடை வெயிலால் விற்பனை சரிந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 35.54 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது