இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவரது மனைவி லூயிஸ் பட்லர் தற்போது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு சார்லி என்று பெயரிட்டுள்ளதாக தம்பதியினர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இவர்களுக்கு ஏற்கனவே ஜார்ஜியா ரோஸ் மற்றும் மார்கோட் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.