இடைத்தேர்தலில் அதிமுக பயத்தில் போட்டியிடவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3-வது, 4-வது இடம் வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் அதிமுக போட்டியிடவில்லை.
மேலும், திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அதிமுக போட்டியிடவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வெல்லும் என நம்பிக்கை இருக்கிறது. பாமக ஜெயித்தா மக்களின் அதிருப்தி வெளிப்படும் என்று கூறியுள்ளார்.