அடுத்தடுத்து நான்கு படுகொலைகள் நடந்துள்ளதாக கூறி இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிவிட்டதாகவும் டாஸ்மாக் மற்றும் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகரித்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் பிரேமலதா கூறியுள்ளார். மேலும் போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி கொலை நாடாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.