₹500 நோட்டுகளின் எண் வரிசையில் நட்சத்திர குறியீடு இருந்தால் அது செல்லாது என்ற செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. மக்கள் மத்தியில் இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் PIB FACT CHECK இது ஒரு பொய்யான தகவல் என மறுத்துள்ளது. மேலும், 2016 முதல் நட்சத்திர (*) குறியீடு கொண்ட ₹500 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.