பாகிஸ்தான் அணியுடன் இருந்து நேரத்தை வீணாக்காமல் இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக வருமாறு கேரி கிறிஸ்டனுக்கு இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல பயிற்சியாளராக கேரி கிறிஸ்டின் கொடுத்த உத்வேகம், கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு கொடுத்த உற்சாகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கிறிஸ்டன் வீரர்களின் செயல்பாட்டை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது