இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் காலமானார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான இவர், அதிலிருந்து பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடங்கினார்.
பின்னர், அதிலிருந்தும் பிரிந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் தொடங்கி தலைவராக இருந்து வந்தார். தமிழ் தேசியவாதியான இவர், தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.