இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. தென்னாபிரிக்காவுக்கு தெற்கே கேப் டவுன் நகரில் இருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் கடலின் ஆழத்தில் இருந்து உருவான இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்க பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை