சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன் 2.. இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் இந்தியன் – 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின்படி, நாளொன்றுக்கு திரையரங்குகள் 4 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். ஆனால், லைகா தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு செவி சாய்த்து நாளை (12.07.2024) மட்டும் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது.