காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என கர்நாடக பாஜக (மங்களூர் வடக்கு) எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமூகத்தைக் காக்க சிவாஜி ஏந்திய ஆயுதங்களை வணங்கும் தேசப் பக்தர்கள் இந்நாட்டில் அதிகம் உள்ளதாகக் கூறிய அவர், அந்த ஆயுதங்களை இந்து விரோதிகளுக்கு எதிராக எப்படி பயன்படுத்த வேண்டுமெனவும் தங்களுக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.