இந்துக்கள் என தன்னை கூறிக் கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு குறித்து மட்டுமே பேசுவதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை தூண்டுவதாக பேசிய அவர், பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்றும், வன்முறையை தூண்டும் இந்துக்கள் எனவும் கூறினார். ராகுலின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல இந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா? மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுலுக்கு பதிலளித்து பேசிய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றார். இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்க முடியாது எனக் கூறிய மோடி, சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் என ராகுல் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்