இன்றையகாலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருங்காலத்தில் மொபைல் ஃபோனே இருக்காது என பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர் காலத்தில் தொலைபேசிக்கு பதிலாக நியூராலிங்க்ஸ் மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், விபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த 29 வயது இளைஞருக்கு, நியூராலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக மூளையில் சிப் பொறுத்தி சோதித்தது குறிப்பிடத்தக்கது.