இந்தியாவில் வாகனங்களுக்கு பாஸ்டேக் தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி பாஸ்டேக் பயன்படுத்துவோர் கேஒய்சி எனப்படும் தங்களுடைய சுயவிவர குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த விவரங்களை பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் அந்த பாஸ்டேக் செல்லாது ஆகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.