கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் இன்று காலை பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராம்பூர் பகுதியில் உள்ள சமாஜ்காட் என்ற இடத்தில் சுமார் 32 பேர் காணாமல் போயினர். SDRF குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். அடுத்த 5 நாட்களுக்கு பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.