தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 34 வயதான எனது கணவர் நான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் என்னை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு உட்படுத்தினார். என்னுடைய மாமனார் என்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார்.
கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மன ரீதியாகவும் துன்புறுத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பெண் புகாரில் கூறி இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.