திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று குட்டி அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரிய பொன்னேரி பகுதியில் வசிக்கும் துரை என்ற மாட்டு வியாபாரி, கடந்த வாரம் வாங்கி வந்துள்ளார். அந்த பசு மாடு தான் இந்த அதிசய கன்று குட்டியை ஈன்று உள்ளது. இதையடுத்து, இரட்டை தலையுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்கின்றனர்.