தமிழகத்தில் தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மதுரை விருதுநகர் கரூர் தேனி திருப்பூர் கன்னியாகுமரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.