2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கோலி விளையாடிய விதத்தை மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். 59 பந்தில் 76 ரன்களை கோலி சேர்த்த போதும், இந்தியா இக்கட்டிலேயே இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கே 90% சாதகமாக இருந்ததாகவும், ஆனால் பவுலர்களே உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்திருப்பதாகவும், தானாக இருந்தால் பவுலருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கியிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.