உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்ச்சியொன்று அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டார். அவரை பாராட்டி பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “இனி பேச்சை உக்ரைன் அதிபர் புடின் தொடர்வார்” என்று கூறி உரையை முடித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், நான் புடினைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறேன் என்று கூறி சமாளித்தார்.