சென்னையில் நடைபெற்றுவரும், தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறின. அவரை நேரில் பார்த்த மாணவிகள் பலர், மேடையிலேயே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மாணவியின் தாயார் ஒருவர். ‘தலைவா’ படத்தில் விஜய் பாடிய ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை, புதிய வெர்ஷனில் பாடினார். உங்கள முதலமைச்சர் ஆக்குறங்கண்ணா என அவர் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.