வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை விவாத நேரத்தில் பேசிய அஸன் மவுலானா எம் எல் ஏ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் இருக்கிறது. அதில் உங்களுக்கு வேண்டியதை காட்டுங்கள். நாங்கள் விலை சொல்கிறோம், வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதனால் சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது.