தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பார்க்கலாம். சென்னை 100 ரூபாய், கோவை, திருப்பூர், மதுரைக்கு 88 ரூபாய், சேலம்,திருச்சிக்கு 84 ரூபாய், நெல்லை, வேலூர், தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு 79 ரூபாய் , தஞ்சை, நாகை, ஓசூர், கடலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் 74 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.