கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கோருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்று விமர்சித்த அவர், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களை விசாரிக்கவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.