தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்கு வெளியேயும் பணி நிரவல் செய்யலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உபரி ஆசிரியர்களை பிற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியமரத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி நிரவல் நடவடிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.