டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். போராட்டம் நடத்திய மாணவர்களை நேரில் சந்தித்து பேசிய அவர் சம்பவத்தை தடுக்க தவறி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உயிரிழப்புக்கு காரணமான எவரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார்.