கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே சாராயத்தை விற்றார்கள். கள்ளச்சாராயத்தையும் விற்க அனுமதித்தார்கள். அதன் விளைவை கள்ளக்குறிச்சியில் கண்ணீராகவும், கதறல்களாகவும் கண்டு கொண்டிருக்கிறோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.