T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஹின்டே 11 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஷ்வால், டுபே உள்ளிட்ட வீரர்களை நேற்று நேரில் அழைத்து பாராட்டிய அவர் இந்த பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனிடையே கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு 125 கோடி பரிசு தொகையை பி சி சி ஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.