2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்க அணி நூலிழையில் தோற்றது அந்த அணி வீரர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் மிகுந்த வருத்தத்துடன் வாட்டமான முகத்துடன் காணப்பட்டார். அப்போது மில்லர் மனைவி அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.