உலகின் மிக இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பிரேசில் நாட்டைச் சேர்ந்த லிவியா வோய்க்ட் (20) பெற்றுள்ளார். இவர் WEG நிறுவனர் (மோட்டார் உற்பத்தி) வெர்னர் ரிக்கார்டோவின் பேத்தியாவார். அவருக்கு அந்நிறுவனத்தில் ரூ.10,020 கோடி மதிப்பு கொண்ட 3.1% பங்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2024 உலக பில்லியனர்ஸ் பட்டியலில் இவர் 2,468 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.