உலகிலேயே மிக நீண்ட நெடுஞ்சாலை ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. கடற்கரை நகரங்கள் அனைத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை 14 ஆயிரத்து 500 கிலோ மீட்டருக்கு நீள்கிறது. ஆஸ்திரேலியாவின் மத்திய பகுதிகளில் பெரும்பாலும் பாலைவனங்களாக இருப்பதால் இடையில் ஊடுருவி செல்லக்கூடிய சாலைகள் ஏதும் அங்கு இல்லை. ஆகையால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே மற்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.