சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘இந்தியன் 2’ திரைப்படம். ஜூலை 12 இல் வெளியாகும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தியனாக உலகத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கனவு என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ‘இந்தியன்-2’ பட புரொமோஷன் நிகழ்வில் கமலிடம் ஆஸ்கார் விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு ஆஸ்கார் விருது முக்கியம் இல்லை. இதை திமிரோடு சொல்லவில்லை. என்மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.