எனக்கும் விஜய்க்கும் இலக்கு 2026 என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித்த சீமான், எனக்கும் விஜய்க்கும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு. நாங்கள் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. விஜயின் அரசியல் வருகை எங்களுக்கு வலு சேர்க்கிறது. நானும் விஜயும் அன்பின் பிணைப்பில் உள்ள அண்ணன், தம்பி என்று தெரிவித்துள்ளார்.