தனது கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம் என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சுமத்தியுள்ளார். சவுக்கு சங்கர் உதகையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், உதயநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, தன் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது என்றார்.