என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நேற்று நள்ளிரவில் முடிந்தது. இதையடுத்து, உடல் அவரது தந்தை கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை மூலக்கொத்தளம் சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.