அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2ஆவது வழக்கிலும், ஜூலை 31 வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. ரூ100 கோடி நில மோசடி புகாரில் தலைமறைவாகி, கடந்த 16 ஆம் தேதி கேரளாவில் கைதான விஜயபாஸ்கர், தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாங்கல் காவல்நிலையத்தில் பதிவான மற்றொரு வழக்கிலும் அவர் நேற்று கைதான நிலையில், கரூர் விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.