அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க வாங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிப்பு செய்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அவரிடம் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருநாள் விசாரணை நீட்டிக்கப்பட்டுள்ளது.