அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது கரூர் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவர் 100 கோடி மதிப்பிலான நிலத்தை போல ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இதேபோல் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் புகார் அளித்துள்ளார். இதில் முன் ஜாமீன் கிடைக்காததால் விஜயபாஸ்கர் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய ஐந்து தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர்.