சீனாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக பணியாளர்கள் தங்களது அலுவல் சார்ந்த பணிகளுக்கு ஐபோனை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஐபோன் 15 மொபைல் ஃபோன்களை அந்த நிறுவனம் அளிக்க உள்ளது.