உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவதால், இட நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. 1955ல் ஒரு சதுர கி.மீக்கு 18 பேர் வாழ்ந்திருக்கின்றனர். 2000 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 41 என மாறிய நிலையில், 2024ல் 55 ஆக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2025-ல் ஒரு சதுர கி.மீக்கு 65 பேர் வாழும் சூழல் உருவாகும். 2024 இன் படி இந்தியாவில் ஒரு சதுர கி.மீக்கு 481 பேர் வாழ்கின்றனர். பங்களாதேஷிலோ ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1329 என்ற அளவில் மக்கள் வாழ்கின்றனர்.