இன்றைய டிஜிட்டல் உலகில் UPI பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்டது. எல்லோருமே ஆன்லைன் மூலாமாக தான் பணத்தை அனுப்பி வருகிறாரக்ள். இந்த நிலையில், இந்திய தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) விதிப்படி, குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, HDFC வங்கியானது தனிநபர் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் தரப்பு UPI செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு 10 முறை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.