ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்மூலம் பெங்களூரு செல்வோர் ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பெங்களூருவின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம், நகருக்கு வடக்கே வெகு தொலைவில் இருப்பதால் தெற்கு பகுதிக்கு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றை ஓசூர் விமான நிலையம் சீர் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.