பழக்குடியினர் நலத்துறையில் உள்ள 328 பள்ளிகளில், 438 ஆசிரியர்கள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரந்தரமாக நிரப்பப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 300 பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் மட்டும் பணிபுரியும் பள்ளிகளாக இருப்பதால், பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.