கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8 செ.மீ., சென்னையை சுற்றியுள்ள செங்குன்றம், ஆவடி, புழல், திருக்கழுக்குன்றம், கத்திவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பொழிந்துள்ளது. மாமல்லபுரம், தஞ்சை மாவட்டம் வல்லம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.